திங்கள், 9 பிப்ரவரி, 2009

சுட்டிகள் பற்றி ஒரு சுட்டி

இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது அழுகின்றது.நம்மன போராட்டங்களை ஆறுமாத குழந்தையும் புரிந்துகொள்கின்றதே அது எப்படி?.ஆசையாய் அள்ளினாலும் அதற்கு புரிகின்றது, எரிச்சலில் அதட்டினாலும் அதற்கு புரிகின்றது.ஆன்மாக்கள் பேசிக்கொள்கின்றனவோ? அவை நம் மரமண்டைகளுக்கு புரிகின்றதில்லையோ?ஒன்று மட்டும் புரிகின்றது வயிற்றில் உதைக்கும் போதே அக்குழந்தைக்கும் மனித குணம் வந்துவிடுகின்றது."Out of the box" குழந்தையும் டிப்பிக்கல் மனிதனே. தன்னை பதப்படுத்திப் பின் கடவுளுக்கு இணையாகின்றான்.குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டாலும் வெட்டென மறந்து ஒட்டிக்கொள்கின்ற அந்த அபூர்வப்பண்பு இருக்கின்றதே-அங்கு தான் குழந்தைகள் நிற்கின்றார்கள்.பிரபலங்கள் பலரும் இப்படி சுட்டியாய் இருக்கும் போது எப்படி இருந்தார்கள் எனப்பார்க்க இங்கே செல்லுங்கள்.Well known`s Childhood Picturesமதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை நண்பர் நாசர் சொல்லும் போது பிறக்கும் குழந்தைகள் கூட இருதய பிரச்சனையோடு பிறப்பதுண்டு என்கின்றார்.இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3,00,000 குழந்தைகள் இதயக்கோளாறோடு பிறக்கின்றனவாம்.ஆரம்பத்திலியே அதை கண்டறிந்தால் அதை சரியாக்குவதற்கான வசதிகள் இக்காலங்களில் இருக்கின்றனவாம்.அது பற்றிய விழிப்புணர்வையூட்ட அவர் உருவாகிய ஒரு யூடியூப் வீடியோ படம் இங்கே.http://www.youtube.com/user/meenakshimissionஉங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நாசர்!!தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றது."ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது.மனிதனைக் கண்டு கடவுள் இன்னும் வெறுப்படையவில்லை அதைரியப்படவில்லை என்பதே"