திங்கள், 9 பிப்ரவரி, 2009

அந்த சிடிக்களை



வெளிநாட்டில் கணவன்... விபரீதமாய் மனைவி*
எனது நெருங்கிய நண்பன் அரபு நாட்டில் வேலை பார்க்கிறான். அவனுடைய இளவயது மனைவி சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ஊர்த் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தவன், தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு, சில ஆபாச சிடிக் களையும் வாங்கி வந்துள்ளான். வீட்டில் தனியாக கணவன், மனைவி இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
லீவு நாட்கள் முடிந்ததும் நண்பன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வீட்டில் தனியாக இருந்த நண் பரின் மனைவி அந்த சிடிக்களை டிவியில் போட்டு ரசித்துக் கொண்டிருக்கும்போது, உறவினர் எதார்த்தமாக வீட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
டிவியை ஆபாசக் காட்சி ஓடிக் கொண்டிருக்க... திட்டி விட்டு திரும்பி சென்றுவிட்டனர். மேலும் நடத்தை கெட்டவள் என்று அனைத்து உற வினர்களிடமும் கூறிவிட்டனர். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவளை தாய் வீட்டிற்கே அனுப்பி விட்டனர். எனது நண்பனோ தான் சிடி கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டால் தனது மரியாதை கெட்டுவிடும் என்று அமைதி யாக இருந்து விட்டான்.
இதனால் மனமுடைந்த நண்பரின் மனைவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தோழிகளே உணர்ச்சிகளை சற்று நேரம் கட்டுப் படுத்தி உஷாராக இருங்கள். நண்பர்களே உங்கள் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்.
- ஆர். கரிகாலன், திருச்சி.
*** * பதறவைத்த பஸ் பயணம்*
எங்கள் ஊருக்கு செல்வதற்காக நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தேன். மூன்று குழந்தைகளோடு சூட்கேஸ், பேக் போன்ற சுமைகளோடு ஒரு பெண்மணி பஸ்சுக் குள் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு குழந்தை பாத்ரூம் போகவேண்டுமென்று அழுதது.
பஸ்சில் மற்ற இரு குழந்தைகளையும், சுமை களையும் பஸ்சில் விட்டுவிட்டு குழந்தையை பாத்ரூமுக்கு அழைத்து சென்றார். போன சில நிமிடங்களில் பஸ்சில் ஏறிய டிரைவர் பேருந்தை கிளப்ப, மற்ற இரு குழந்தைகளும் அழுதன.
உடனே இருவரையும் இறக்கிவிட்டு, சுமை களோடு வண்டியை கிளப்பிவிட்டார் டிரைவர். திரும்பி வந்த அந்த பெண்மணி, சுமைகள் பஸ்சிலேயே சென்று விட்டன என்று கத் தினார். ஊருக்கு செல்வதற்கு கூட பண மில்லையே என்று வருந்தினார். உடனே நான் அந்த பெண்மணியை பேருந்து மேலாளரிடம் அழைத்துச் சென்றேன்.
அவரிடம் நடந்தை விளக்க, அவர் செல்போன் மூலம் பஸ் டிரைவரிடம், ``பேருந்தில் இருக் கும் சுமைகளை பத்திரமாக வைத்திருங்கள். பின்னால் வரும் பஸ்சில் சம்பந்தப்பட்ட பய ணியை அனுப்பி வைக்கிறேன்`` என்று கூறினார்.
பின்னர் பத்திரமாக அவர்கள் அடுத்த பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே பேருந் தில் செல்லும்போது நேரம் தவறாமல் கவனத்துடன் செல்லுங்கள். இல்லை என்றால் இப்படி கஷ்டப்பட வேண்டியதுதான்.
- எஸ்.சதீஷ்குமார், கொல்லங்குளம்.
*** * சேவை இங்கு தேவை*
எனது உறவினர் ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தோம். அதே வார்டில் பல பேர் இருந்தனர். அந்த நேரம் மருத்துவர் நோயாளியை சந்திக்கும் நேரம். அதனால் பார்வையாளர்கள் அனைவரும் வெளியே காத்திருந்தோம்.
அங்கு சிகிச்சை பெறும் ஒரு முதியவர் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு சிறுநீர் கழிக்கும் அவசியம் நேரிட்டது. உடனே அவர் செவிலியரை அழைத்தார். ஆனால் அவர்களோ முதியவருக்கு உதவாமல் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந் தனர்.
அந்த முதியவர் எழவே முடியாமல் கையை அசைத்து அசைத்து அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் சென்றபிறகு வேண்டா வெறுப்பாக உதவ சென்றனர்.
அதற்குள் அவர் சிறுநீரை அடக்க முடியாமல் சிறிது வெளியேறி விட்டது. இதனால் அந்த முதியவர் பதட்டமாகி விட்டார். உலகிலேயே சிறந்த சேவை நோயாளிகளுக்கு உதவுவது. செவி லியர்கள்அதை சிறப்புடன் செய்ய வேண்டும்.
- .ரெஜினா, தஞ்சாவூர்.
***
*பெற்றோருக்கு குழந்தை... மற்றவர்களுக்கு `குமரி '*
என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒரு பெண் வயது 12. ஆனால் அவளின் உடல் வளர்ச்சியோ பதினைந்து வயது பெண்ணாக காட்டியது. மேலும் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தாள். இதைக் கண்டு எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு அந்த நேரத்தில் ஒரு வயதான ஆண் வந்திருந்தார். அவர் அந்த குழந்தையை பார்த்த விதமும், நடந்துகொண்ட விதமும் சரியாக இல்லை.
இதனால் மனதுக்குள் வருத்தமடைந்த நான், அந்த குழந் தையை லாவகமாக அவரிடம் இருந்து பிரித்து, எனக்கு அருகில் உட்கார வைத்தேன்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். அவர்களின் உடல் வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளது. பெற்றோர்களின் கண்களுக்கு அவர்கள் குழந்தையாக தெரிந்தாலும், மற்ற வர்களின் கண்களுக்கு குழந்தைகளாக தெரிவதில்லை என்பதே கசப்பான உண்மை!
எனவே குழந்தைகளின் பெற்றோர், எப்போதுமே தங்களின் குழந்தைகளுக்கு `நாகரீகமான` ஆடைகளை அணிவித்து அழகு பாருங்கள். அதுதான் உங்கள் குழந்தைகளுக்கு அழ கானது.... பாதுகாப்பானது! பின்னாளில் அவர்கள் வளர்ந்தாலும், இந்த மாதிரியான உடை களையே அவர்கள் அணியும் பழக்கம் வந்துவிடும். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது!
- மு.அம்மு, நெல்லை.