திங்கள், 9 பிப்ரவரி, 2009

சின்ன வயசில்


சரி, தவறு என்று இதில் ஒன்றும் இல்லை. அனால் எந்த நிகழ்வுகளின் மூலமும் ஒரு பாடம் கற்றுக்கொள்ளச் செய்யலாமே.
சிலர் தோல்வியைக் கண்டு துவண்டுவிடும் மனப்பன்மையை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள். வாலிப வயதில், முதிர்ந்த வயதில் முதன் முதலாக தோல்வியைச் சந்தித்தால் அவர்கள் எதிர்காலம் மிக வீணாகி விடும்.
சிறு வயதில் வெற்றி தோல்விகளை அந்தந்த பக்குவத்தில் எடுத்துக்கொள்ள பழக்கினால் அவர்களது எதிகாலம் அவர்கள் கையிலிருக்கும்.
இது என் சொந்த கருத்துதான். மறுக்கவோ ஏற்காமல் இருக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அன்புடன் குமார்(சிங்கை)
----- Original Message ---- From: அன்பு குயில் ...@gmail.com> To: muththamiz@googlegroups.com Sent: Monday, May 7, 2007 6:21:46 PM Subject: [muththamiz] Re: AirTel Super Singer
வாழ்க்கை முழுதும் தோல்வியைதானே பார்கிறான் மனிதன் சின்ன குழந்தையாக இருக்கும் போது அது தேவையா விளையாட்டா தொலைக்காட்சீயில் பாடினோம் வந்தோம்னு இருந்தா ஜாலி
On 5/7/07, KAMAL RAJAN ...@gmail.com> wrote: அது எப்படிங்க.. தோல்வி மனிதனுக்கு தேவை.. மிக மிக தேவை.. தோல்வியின் வலி தெரியாமல் இருந்தால் வெற்றியின் அருமை தெரியாமல் போய்விடும்.. உங்கள் கன்ணோட்டமே வித்தியாசமாக உள்ளது.. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல குழந்தைகளின் திறமை வெளி வருகிறது.. மற்றும் தோல்வி அடைந்த குழந்தைகளுக்கு தங்கள் தவறை திருத்தி கொள்ள ஒரு சந்தர்ப்பம்.. அடுத்த நிகழ்ச்சி நடத்தாமலா போக போகிறார்கள்?? அதில் தவரை திருத்தி வெற்றி கனியை ருசிக்கலாமே!!
இந்த விஷயத்தில் பெற்றோரைஉம் சொல்லலாம்.. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க சொல்கிறார்களே ஒழிய தவறோ,தோல்வியோ நேர்ந்தால் எப்படி எதிர் கொள்வது என்று கூறுவது இல்லை.. பிள்ளைப்பாசம் என்றாலும் பின்னால் இந்த விஷயம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் நிறைய விஷயத்திற்கு உபயோகப்படும்..
நானும் என் குழந்தையை இப்படிதான் வளர்க்கலாம் என்று இருக்கிறேன்..
On 5/7/07, அன்பு குயில் < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> wrote: //என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((//
உண்மைதான் சிவா உங்க மனநிலைதான் எனக்கும்
On 5/7/07, K.R Kumar ...@yahoo.com > wrote: அன்புள்ள சிவசங்கர் ஐயா,
உங்கள் கருத்து கொஞ்சம் இடிக்கிறது.
தோல்வியுற்ற சிறு குழந்தைகள், சிறுவர்கள் அழும்போது நம் மனம் கலங்குவது உண்மைதான்.
இன்னுமொரு கண்ணோட்டத்தில் நோக்கலாமே. இதை ஒரு படிப்பினையாகக் , நாளைய வெற்றியின் முதல் படியாகக் கொள்ளலாமே !.
சொல்வது சுலபம், செய்வது கடினம் தான். இருந்தாலும் போட்டிகளில் அதை சீரணித்து அடுத்த முறை மேலும் நன்றாகச் செய்யும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
போட்டி என்று வந்துவிட்டால் கட்டாயம் வெற்றி-தோல்வி என்பது இருக்கும். நடுவர்களூக்கு என்னதான் criteria கொடுத்திருந்தாலும் அவர்களுடைய மன ஓட்டமும் போட்டியாளர்களின் வெற்றி-தோல்வியை நிச்சயிக்கும்.
ஆகவே நான் வெற்றி பெறாதது(தோற்றது என்று கூறுவதைத் தவிர்க்கிறேன்) எனது திறமைக் குறைவினால் அல்ல, மற்றும் பல காரணங்களால் என்று அந்தக் குழந்தைகள் உணர்ந்தால் விரைவில் தோல்வியின் அதிர்சியிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கி நடை போடுவார்கள்.
இதற்கான பொறுப்பு பெற்றோர்களிடத்திலும் போட்டி நடத்துபவர்களிடத்தலும் தான் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் எல்லா வயதினர்க்கும் பலவிதமான போட்டிகளை நடத்திய அனுபவத்தில் தோன்றிய கருத்து.
அன்புடன், குமார்(சிங்கை)
----- Original Message ---- From: Siva Sankar < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> To: muththamiz@googlegroups.com Cc: பிரியமுடன்..iTamizhFriends <> Sent: Monday, May 7, 2007 3:12:01 PM Subject: [muththamiz] Re: AirTel Super Singer
என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((
On 5/7/07, ஷாரா ...@gmail.com > wrote: விஜய் டி.வி.யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் குட்டி பிள்ளைகளுக்கான பாட்டு போட்டி... அந்த சின்ன வயசில் பிஞ்சு குழந்தைகள் தோல்வி தாங்காமல் அழுதா, மனம் உடைந்து வெளியேறுவதை பார்க்க முடிகிறதா... இவ்வளவு டென்ஷனை போட்டியின் நடுவர்கள் எப்படி சாமளிக்கிறார்கள்... நடுவராக இருக்கும் சித்ரா, உஷா உத்தப்பிடம் பேசினோம்...